ECONOMY

RON 97 எரிபொருள் விலையின் மாற்றம்

3 மார்ச் 2022, 9:34 AM
RON 97 எரிபொருள் விலையின் மாற்றம்

கோலாலம்பூர், மார்ச் 3: RON97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு 16 காசு அதிகரித்தது, அதே நேரத்தில் RON95 மற்றும் டீசல் விலை மார்ச் 3 முதல் 9 வரை ஒரே மாதிரியாக இருக்கும்.

RON 97இன் விலை லிட்டருக்கு 16 காசு அதிகரித்து RM3.45 ஆக இருக்கும் என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. RON95 இன் விலையில் எந்த மாற்றமும் இல்லை மற்றும் லிட்டருக்கு RM2.05 என்ற விலையில் தொடரும். டீசல் விலையும், லிட்டருக்கு 2.15 வெள்ளியாக உள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, தொடர்ந்து மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தான் RON97 RM3.29 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு நான்காவது முறையாக விலை அதிகரித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.