ECONOMY

கிள்ளானில் நீர் விநியோகம் முழுமையாகச் சீரடைந்தது

1 மார்ச் 2022, 12:46 PM
கிள்ளானில் நீர் விநியோகம் முழுமையாகச் சீரடைந்தது

ஷா ஆலம், மார்ச் 1- கிள்ளான் வட்டாரத்தின் 11 பகுதிகளில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை இன்று மாலை 4.00 மணியளவில் முழுமையாகச் சீரடைந்ததாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

கிள்ளான், தாமான் அண்டலாஸ் ஜாலான் செருலிங் 59 பகுதியில் நேற்றிரவு 8.00 மணியளவில் குழாய் உடைந்த காரணத்தால் சுற்றுவட்டாரத்தின் 11 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

பண்டார் புத்ரா 2, பண்டார் புத்ரி, ஜாலான் தெந்தேரா, ஜாலான் லக்ஸ்மணா, ஜாலான் ராஜா நோங், ஜாலான் ஸ்ரீ சரவா, ஜாலான் சுங்கை ஜாத்தி, ஜாலான் தெமெங்கோங், தாமான் ராக்யாட், தாமான் செந்தோசா ஆகியவையே பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.