ECONOMY

ஜோகூர் தேர்தல்- ஆறு பி.கே.ஆர். வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார் அன்வார்

14 பிப்ரவரி 2022, 2:15 PM
ஜோகூர் தேர்தல்- ஆறு பி.கே.ஆர். வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார் அன்வார்

ஷா ஆலம், பிப் 14- ஜோகூர் மாநிலத் தேர்தலில் பி.கே.ஆர். கட்சி சார்பில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களின் பெயர்களை கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெளியிட்டார்.

அந்த வேட்பாளர்களில் முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக்கும் ஒருவராவார். இவர் லாயாங் லாயாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் தென் பிராந்தியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வருமாறு-

- ஜோகூர் கெஅடிலான் தலைவி நப்சியா காமிஸ் மஹாரான் ( கெம்பாஸ் தொகுதி)

- ஜோகூர் கெஅடிலான் இளைஞர் பிரிவு செயலாளர் முகமது ஃபக்ருடின் மோஸ்லிம் ( பாசீர் ராஜா தொகுதி)

- ஜோகூர் மாநில கெஅடிலான்  உதவித் தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் (திராம் தொகுதி)

- தெப்ராவ் தொகுதி கெஅடிலான் செயலாளர் சோங் சென் செம் (புக்கிட் பத்து தொகுதி)

- பாசீர் கூடாங் தொகுதி கெஅடிலான் பொருளாளர் டாக்டர் ஜமில் நஜ்வான் அர்பாய்ன் (லார்க்கின் தொகுதி)

இவர்களில் மஸ்லி மட்டும் மத்திய பிராந்தியத்திலுள்ள தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராவார்.  மத்திய பிராந்தியத்திற்கான மற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று அன்வார் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.