ECONOMY

எஸ்ஓபியை மீறிய ம.இ.கா தலைவர் மற்றும் அமைச்சருக்கு அபராதம்! கைரி  உத்தரவிட்டார்

14 பிப்ரவரி 2022, 3:53 AM
எஸ்ஓபியை மீறிய ம.இ.கா தலைவர் மற்றும் அமைச்சருக்கு அபராதம்! கைரி  உத்தரவிட்டார்

ஜோகூர் பாரு,பிப் 14: கோவிட்-19 தரநிலை இயக்க நடைமுறையை மீறியதற்காக, இன்று இஸ்கந்தர் புத்தெரியில் உள்ள எடுசிட்டி அரங்கத்தில் ம.இ.கா இசை படைப்பிரிவு தொடக்க விழா ஏற்பாட்டாளர்களுக்கு  அபராதம் வெளியிடுமாறு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், சுகாதார அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாரிசான் நேசனல் (பிஎன்) பொருளாளர் ஜெனரல் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன், ஜோகூர் பிஎன் தலைவர் டத்தோ ஹஸ்னி முகமது மற்றும் மஇகா தலைவர் டான்ஸ்ரீ ச விக்னேஸ்வரன் ஆகியோர் கூட்டு நடவடிக்கையை எதிர்கொள்கின்றனர்.

இந்த விஷயத்தை கைரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மூலம் அறிவித்தார். டத்தோஸ்ரீ ஹிஷாமுடின்,டத்தோஸ்ரீ ஹஸ்னி,டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தற்போதுள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு சட்டம் 342ன் கீழ் ஒரு அபராதம் வழங்குமாறு கே.கே.எம் புத்ராஜெயா அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். கே.கே.எம் புத்ராஜெயா ஜொகூர் பி.ஆர்.என் க்கு எஸ்.ஓ.பியைத் தொடர்ந்து கண்காணிக்கும், என்று அவர் கூறினார்.

ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் விழாவின் வீடியோவைப் பதிவேற்றிய போர்ட்டலுக்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார். மாலை 5.20 மணிக்கு விழா தொடங்கியதாகவும், விழாவில் 3,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது.

மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் மாநில தேர்தலுக்கு முன் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதல் முறை என தெரிகிறது.. -பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.