கோலாலம்பூர், 3 பிப் 3- நாட்டில் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வரை 1 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 099 பேர் அல்லது 51.5 சதவீதம் பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.இது தவிர, 2 கோடியே 29 லட்சத்து 25 ஆயிரத்து 835 பேர் அல்லது 97.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றனர். அதே நேரத்தில் 99.1 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 32 லட்சத்து 2 ஆயிரத்து 575 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இதனிடையே, 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இளையோரில் 27 லட்சத்து 88 ஆயிரத்து 874 பேர் அல்லது 88.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 67 ஆயிரத்து 944 பேர் அல்லது 91.1 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
நேற்று மொத்தம் 30,194 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அதில் 257 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 449 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 29,488 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதற்கிடையில், நேற்று கோவிட்-19 தொடர்புடைய ஏழு மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாகசுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.
ECONOMY
நாட்டில் 51.5 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்
3 பிப்ரவரி 2022, 9:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
பொருளாதார நெருக்கடி: சிலாங்கூரில் 40 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




