ECONOMY

வெள்ளத்திற்கு பிந்தைய பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்- மந்திரி புசார்

2 பிப்ரவரி 2022, 2:34 AM
வெள்ளத்திற்கு பிந்தைய பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், பிப் 2- வெள்ளம் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி நடவடிக்கைள் இவ்வாண்டில் துரிதப்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொருளாதார வளர்ச்சித் தடத்தில் சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

மலேசியா மற்றும் ஆசிய வட்டாரத்தில் நீடித்த பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலம் என்ற அந்தஸ்தை சிலாங்கூர் தொடர்ந்து நிலை நிறுத்துவதை உறுதி செய்வதற்காக வெள்ளம் மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை மாநில அரசு இவ்வாண்டு துரிதப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இயங்கலை வாயிலாக நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலா 2022 சீனப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.

 

நேற்றிரவு 9.00 மணி தொடங்கி நடைபெற்ற இந்த 90 நிமிட நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினரின் சிறப்புரையோடு 55 கலைஞர்கள் பங்கேற்ற 10 கலை படைப்புகளும் இடம் பெற்றன.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.