ECONOMY

மாமன்னர் தம்பதியரின் சீனப்புத்தாண்டு வாழ்த்துகள்

1 பிப்ரவரி 2022, 2:43 AM
மாமன்னர் தம்பதியரின் சீனப்புத்தாண்டு வாழ்த்துகள்

கோலாலம்பூர், பிப் 1- நாட்டில் இன்று சீனப்புத்தாண்டை கொண்டாடும் சீன சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்லான் ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா மைமுனா தம்பதியர் தங்களின் வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த சீனப்புத்தாண்டில் நாட்டு மக்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுபிட்சமும் மகிழ்ச்சியுடம் சூழ வாழும் அதே வேளையில் பல்வேறு இன, சமயங்களைச் சேர்ந்த மலேசியர்களிடையே ஒற்றுமை  மேலோங்குவதற்கும் இத்திருநாள் வழிவகுக்கும் எனத் தாங்கள் நம்புவதாக அவர்கள் கூறினர்.

இஸ்தானா நெகாராவின் பேஸ்புக் மற்றும் இண்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் வாயிலாக வழங்கிய சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

புத்தாண்டுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதேவேளையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

 

அவர்கள் சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.