ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரின் 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை

31 ஜனவரி 2022, 10:18 AM
சிலாங்கூரின் 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஜன 31- சிலாங்கூர் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதோடு  பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோல லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இந்த மோசமான வானிலை காணப்படும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

பேராக், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களும் இதே வானிலையை எதிர்கொள்ளும் என அது தெரிவித்தது.

பேராக்கில், கோல கங்சார், கிந்தா, கம்பார்,  பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகியவையும்  நெகிரி செம்பிலானில் ஜெலுபு, சிரம்பான் மற்றும் போர்ட் டிக்சன் ஆகியவையும் பாதிக்கப்படும் பகுதிகளாகும் .

இடியுடன் கூடிய மழையின் அளவு 20 மில்லி மீட்டருக்கு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.