ALAM SEKITAR & CUACA

நாளை முதல் பிப். 6 வரை எட்டு மாநிலங்களில் இடியுடன் கூடிய அடைமழை

30 ஜனவரி 2022, 10:33 AM
நாளை முதல் பிப். 6 வரை எட்டு மாநிலங்களில் இடியுடன் கூடிய அடைமழை

ஷா ஆலம், ஜன 30- தீபகற்ப மலேசியாவிலுள்ள எட்டு மேற்கு கரை மாநிலங்களில் நாளை தொடங்கி வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர், கெடா, பேராக், கோலாலம்பூர், புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் பகாங் மாநிலத்தின் உட்புறப்  பகுதிகளில் மாலை தொடங்கி முன்னிரவு வரை இந்த மோசமான வானிலை நிலவும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

கிழக்குக் கரை மாநிலங்களில் வானிலை மந்தமாக காணப்படும் என்பதோடு சபாவில் காலை வேளைகளில் மழை பெய்யும் என அது தெரிவித்தது.

தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களில் வெப்பம் நிறைந்த மற்றும் வறட்சியான வானிலை காணப்படும்  என அத்துறை கணித்துள்ளது.

மேலும், அடுத்த மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தென் சீனக்கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.