ECONOMY

சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு 192 பேர் விருது பெற்றனர்

25 ஜனவரி 2022, 6:30 AM
சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு 192 பேர் விருது பெற்றனர்

ஷா ஆலம், ஜன 25-  மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் 75 வது  பிறந்தநாளை முன்னிட்டு கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களை  சேர்ந்த 192 பேர் பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களில் 17 பேருக்கு பிங்காட் பெக்கர்த்தி தெர்பிலே (பி.பி.டி) விருதும் 70 பேருக்கு பிங்காட பெர்ஹிட்மத்தான் செமெர்லாங் (பி.பி.சி.) விருதும் 86 பேருக்கு பிங்காட் ஜாசா கெபக்தியான் (பி.கே.கே.) விருதும் 19 பேருக்கு பிங்காட் பெர்ஹிட்மத்தான் சிலாங்கூர் (பி.பி.எஸ்.) விருதும் வழங்கப்பட்டன.

இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு சிலாங்கூர் சுல்தான் சார்பில் ராஜா மூடா சிலாங்கூர் துங்கு அமீர் ஷா தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.