ECONOMY

44.4  விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

22 ஜனவரி 2022, 10:27 AM
44.4  விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஜன 22- நாட்டில் நேற்று  160,310 பெரியவர்களுக்கு  பூஸ்டர்  எனப்படும் ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.  இதன் வழி அந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை  1 கோடியே 3  லட்சத்து 99  ஆயிரத்து 699 ஆக அல்லது 44.4 விழுக்காடாக  உயர்ந்துள்ளது.

இதனிடையே  2 கோடியே 29 லட்சத்து 14 ஆயிரத்து 736 பெரியவர்கள் அல்லது 97.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக  சுகாதார அமைச்சின் கோவிட்நாவ்  அகப்பக்கம் கூறியது.

மேலும்,  2 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து  052 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினருக்கு குறைந்தது  ஒரு டோஸ்  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக  அது தெரிவித்தது.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 79 ஆயிரத்து 564 பேர் அல்லது  88.3 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப்  பெற்ற வேளையில் 28 லட்சத்து  63 ஆயிரத்து 594 பேர் அல்லது 91 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று 163,942 பேருக்கு கோவிட்.19 தடுப்பூசி செலுத்தப்பட்டதை அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன. அவற்றில் 1,368 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 2,264 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 16 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.