ஷா ஆலம், ஜன 19- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஊஜோங் பெர்மாத்தாங் மற்றும் தஞ்சோங் காராங் துணை மாவட்டங்களைச் சேர்ந்த 384 குடும்பத்தினர் மாநில அரசின் வெள்ள உதவித் தொகையான 1,000 வெள்ளியைப் பெற்றனர்.கடந்த மாத மத்தியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வீட்டிலேயே தங்கியிருந்தவர்களுக்கு இந்த மூன்றாம் கட்ட நிதியளிப்பின் போது உதவித் தொகை வழங்கப்பட்டதாக பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
முதல் கட்டத்தில் 253 பேருக்கும் இரண்டாம் கட்டத்தில் 58 பேருக்கும் நிதி வழங்கப்பட்டது.இவர்கள் அனைவரும் வெள்ளத்தின் போது நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களாவர் என்றார் அவர்.
இரட்டை விண்ணப்பங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவித் தொகை கூடிய விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
சில இடங்களில் ஒரே வீட்டில் வசிக்கும் தந்தையும் மகனும் உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இதனால் மனுக்களை பரிசீலிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
பெர்மாத்தாங் தொகுதியில் 384 பேர் வெள்ள உதவித் தொகையைப் பெற்றனர்
19 ஜனவரி 2022, 11:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




