ஷா ஆலம், ஜன 13- கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் புதிய தலைவராக நோராய்னி ரோஸ்லான் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த பதவியேற்பு நிகழ்வு எம்.பி.கே. ராஜா மஹாடி கூட்ட அறையில் நேற்று நடைபெற்றது.
சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் முன்னாள் டத்தோ பண்டாரான நோராய்னி, டத்தோ அகமது ஃபாட்ஸ்லி தாஜூடினுக்கு பதிலாக கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தாஜூடின் கடந்த மாதம் 16 ஆம் தேதியன்று மாநில நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டாராக பொறுப்பேற்பதற்கு முன்னர் கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத் தலைவராக கடந்த 2011 முதல் 2017 வரை பதவி வகித்தார்.
அமெரிக்காவின் வட கரோலினா பல்கழைக்கழகத்தில் வட்டார திட்டமிடல் துறையில் பட்டம் பெற்ற்றுள்ள 58 வயதான நோராய்னி, கிள்ளான் நகராண்மைக் கழகத்தில் திட்டமிடல் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
ECONOMY
கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவராக நோராய்னி ரோஸ்லான் நியமனம்
13 ஜனவரி 2022, 7:13 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

உங்கள் கருத்து என்ன?




