பந்திங், ஜன 1 - டிங்கிலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியை வழங்கும் பணியின் முதல் கட்டம் செவ்வாய்கிழமை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் தங்கிருந்த 700 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிலாங்கூர் பாங்கிட் திட்டத்தின் கீழ் கடந்த வியாழனன்று உதவித் தொகை வழங்கப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பு அதிகாரி ஹமிடி ஏ ஹாசன் தெரிவித்தார்.
உதவித் தொகை மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 5,000 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயனடையும்.
தற்காலிக நிவாரண மையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை முதல் கட்டமாக உதவித் தொகை விநியோகிக்கப்பட்டது என்றார் அவர்.
வெள்ளத்தின் போது தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம் பெயராதவர்கள் மீது இரண்டாம் கட்டத்தில் கவனம் செலுத்தப்படும். மூன்றாம் கட்டத்தில் இதன் தொடர்பான இதர கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகளை தாங்கள் பெற்று வருவதாகக் கூறிய அவர், கிராமத் தலைவர்கள் மற்றும் சமூக சேவை மைய அலுவலகம் மூலம் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
ALAM SEKITAR & CUACA
டிங்கிலில் முதல் கட்ட உதவித் தொகை வழங்கும் பணி செவ்வாயன்று முற்றுப் பெறும்
1 ஜனவரி 2022, 8:31 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

selangor
ஊராட்சி மன்ற வணிக வளாகங்களின் வாடகை குறைப்பு: சிலாங்கூர் மாநில அரசு பரிசீலனை
Shalini Rajamogun
6 மே 2026

உங்கள் கருத்து என்ன?




