ECONOMY

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக இலவச குப்பைத் தோம்புகள் விநியோகம்

29 டிசம்பர் 2021, 11:48 AM
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக இலவச குப்பைத் தோம்புகள் விநியோகம்

ஷா ஆலம், டிச 29- வெள்ளம் பாதித்த பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்காக லோரிகள் மூலம் கொண்டுச் செல்லப்படும் பெரிய அளவிலான குப்பைத் தோம்புகள் ஆங்காங்கே வைக்கப்படுகின்றன.

இந்த குப்பைத் தோம்புகள் இலவசமாக விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமின்றி அதனைப் பயன்படுத்தலாம் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ஷா ஆலம் மாநகர் மன்றமும் கும்புலான் டாருள் ஏசான்  வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் இந்த குப்பைத் தோம்புகளை தயார் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ரோரோ வகை தோம்புகளை ஷா ஆலம் மாநகர் மன்றமும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேமெண்ட் நிறுவனமும் ஆங்காங்கே வைத்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக இவை இலவசமாக வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர். 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.