கோலாலம்பூர், டிச 27 - நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ள வேளையில் மேலும் ஐவரைக் காணவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தில் 25 பேர் பலியாகி யுள்ள வேளையில் பகாங்கில் 20 பேரும் கிளந்தானில் மூவரும் உயிரிழந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் பலியானவர்களில் 17 ஆண்கள் மற்றும் எட்டு பெண்களும் அடங்குவர். பகாங்கில் 14 ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார். கிளந்தானில் இரண்டு ஆண்களும் ஒரு சிறுமியும் பலியானானதாகவும் அவர் குறிப்பிட்டார்.








