ஷா ஆலம், டிச 27 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று இரவு 9.00 மணி வரை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனஜ்மெண்ட் கழிவு மேலாண்மை நிறுவனம் மூலம் சுமார் 2,077 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு நிறைவான சேவைகள் வழங்குவது தொடர்ந்து உறுதிசெய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று டிசம்பர் 26 ஆம் தேதி இரவு 9.00 மணி நிலவரப்படி 336 லாரிகள் மற்றும் 51 மண்வாரி இயந்திரங்களைப் பயன்படுத்தி மொத்தம் 2,077 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றியுள்ளோம். இப்பணியில் அதிகாரிகள் உள்ளபட 767 பேர் பஙகேற்றனர் என்று முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்தது.
சிலாங்கூரில் வெள்ளத்திற்குப்பிந்தைய துப்பரவுப் பணிகள் தொடர்ந்து துரிதப்படுத்துவதாக அநநிறுவனம் மேலும் கூறியது.
முன்னதாக, உலு லங்காட், பூச்சோங், மேரு, செமினி, மற்றும் கம்போங் பெஸ்தாரி ஜெயா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்திற்குப்பிந்தைய தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ECONOMY
வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2,077 டன் குப்பைகள் அகற்றப்பட்டன
27 டிசம்பர் 2021, 6:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




