ECONOMY

கிள்ளான், ஷா ஆலமில் குப்பைகளை அகற்றும் பணி 50 விழுக்காடு பூர்த்தி

26 டிசம்பர் 2021, 4:12 AM
கிள்ளான், ஷா ஆலமில் குப்பைகளை அகற்றும் பணி 50 விழுக்காடு பூர்த்தி

ஷா ஆலம், டிச 26 - கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி 50 விழுக்காட்டை எட்டியுள்ளதாக  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

குப்பைகளை அகற்றுவதில் திருப்திகரமான நிலையை எட்டாத பகுதிகளில் செயலாக்க முறையை விரைவுபடுத்தும்படி தாம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

துப்புரவு நோக்கங்களுக்காக மேலும் அதிகமான லோரிகளைப் பெற  பல தரப்பினரை தாங்கள் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடனான ஒத்துழைப்பும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மனித வளம் வீணடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய  இந்த செயல்முறையை மாநில அரசு சீரமைக்க விரும்புகிறது. மேலும் இந்த ஒருங்கிணைப்பு தன்னார்வலர்களின் பாதுகாப்பிற்கும் முக்கியமானது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.