ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் குப்பை கொட்டும் மையங்களில் பணி நேரம் நீட்டிப்பு

24 டிசம்பர் 2021, 7:48 AM
சிலாங்கூரில் குப்பை கொட்டும் மையங்களில் பணி நேரம் நீட்டிப்பு

ஷா ஆலம், டிச 24 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  இருந்து குப்பைகளை அகற்றும் பணியை விரைவுபடுத்தும் வகையில் மாநிலத்திலுள்ள இரண்டு குப்பை சேகரிப்பு மையங்களின் செயல்பாட்டு நேரம் நேற்று முதல் இரவு 11.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெராமிலுள்ள உள்ள வேர்ல்டு வைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கு  சொந்தமான குப்பை கொட்டும் மையமும் இதில் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வேர்ல்டு வைட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குசொந்தமான ஜெராமில் உள்ள குப்பைக் கொட்டும் மையம் தவிர, பெர்ஜாயா புக்கிட் தாகார் குப்பைக் கொட்டும் மையமும் இன்று முதல் இரவு 11.00 மணி வரை செயல்படும் என்று என தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.