மேரு, டிச 14- மேரு சட்டமன்றத் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 20 நோயாளிகள் 5,000 வெள்ளி வரையிலான மருத்துவ உதவியைப் பெற்றனர்.நோயாளிகளின் நிதிச்சுமையைக்குறைக்கும் நோக்கில் இவ்வாண்டில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக மேரு தொகுதி உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.இந்த பெடுலி சேஹாட் திட்டத்திற்கு 30 நோயாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்தன.எனினும் தகுதியுள்ள 20 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மருந்துகள், கட்டில், சக்கர நாற்காலி போன்ற உபகரணங்கள் மற்றும் இதர வகை உதவிகள் இந்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன என்றார் அவர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இந்த பெடுலி சோஹாட் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாதம் 2,000 , வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் 85,000 குடும்பங்களின் சுகாதார பாதுகாப்புக்கு உத்தவாதம் அளிக்கும் வகையில் இத்திட்டம் கடந்தாண்டில் மேம்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் அடிப்படை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக குடும்பங்களுக்கு 500 வெள்ளியும் திருமணமாகாதவர்களுக்கு 200 வெள்ளியும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இது தவிர, விபத்தில் மரணமடையும் அல்லது நிரந்தர முடத்தன்மைக்கு ஆளாகும் பெடுலி சேஹாட் உறுப்பினர்களுக்கு 5,000 வெள்ளி வழங்கப்படும்.
மேலும், மரண சகாய நிதியாக 1,000 வெள்ளி, கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 வெள்ளி,இயற்கை மரணங்களுக்கு 5,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
ECONOMY
பி40 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேருக்கு மருத்துவ உதவி
14 டிசம்பர் 2021, 11:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சிலாங்கூர் எம்பிஐ தயார்நிலை: வியூகம் வகுக்க ஆலோசனை
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




