ECONOMY

கோவிட்-19 தடுப்பூசி கலவை சிறந்த நோய்த் தடுப்பாற்றலை வழங்குகிறது- இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு

7 டிசம்பர் 2021, 6:14 AM
கோவிட்-19 தடுப்பூசி கலவை சிறந்த நோய்த் தடுப்பாற்றலை வழங்குகிறது- இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்து, டிச 7- கோவிட்-19 தடுப்பூசிகளின் கலவை மக்களுக்கு சிறந்த நோய்த் எதிர்ப்பாற்றலை வழங்குவது பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆஸ்ட்ரோஸேனேகா அல்லது  ஃபைசர் தடுப்பூசியைப் முதல் டோஸ் பெற்றவர்கள் ஒன்பது வாரங்கள் கழித்து மோடேர்னா தடுப்பூசியை இண்டாவது டோஸ் பெறும் போது அவர்களுக்கு சிறப்பான நோய்த் எதிர்ப்பாற்றல் உள்ளதை கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

இரு தடுப்பூசிகளின் கலவை சிறப்பான நோய்த் எதிர்ப்பு சக்தியை வழங்குவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இரு டோஸ் தடுப்பூசிகளுக்கு ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராஸேனேகா நிர்ணயித்துள்ள உச்ச அளவு தடுப்பாற்றலை விட இது அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வினை மேற்கொண்டு வரும் ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் மேத்தியு ஸ்னேப் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இரண்டாம் தடுப்பூசிக்கான விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை அல்லது நிலையற்றப் போக்கு காரணமாக இதர தடுப்பூசிகளை கலக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏழ்மை அல்லது நடுத்தர நாடுகளுக்கு இந்த அறிவிப்பு நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ள குறைந்த அல்லது நடுத்தர வருமானம் பெறு நாடுகளுக்கு  இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும் என்று மெத்தியு கூறினார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.