ECONOMY

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைக் தடை

30 நவம்பர் 2021, 5:01 AM
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைக் தடை

ஷா ஆலம், நவ 30- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலும் மலையேறும் நடவடிக்கைள் யாவும் நாளை தொடங்கி தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

இந்த தடை அடுத்தாண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று சிலாங்கூர் மாநில வன இலாகா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக 1985 ஆம் ஆண்டு தேசிய வனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த இலாகா வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு  03-55447000, 03-55447507 என்ற எண்களில் அல்லது admin_eco_park@foerstry.gov.my. என்ற மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.