ECONOMY

மக்கள் டியூஷன் திட்டத்திற்கு 70 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

26 நவம்பர் 2021, 9:49 AM
மக்கள் டியூஷன் திட்டத்திற்கு 70 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 26- வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில்  மக்கள் டியூஷன் திட்டத்திற்கு 70 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நடப்பு கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு ஹைப்ரிட் எனப்படும் மாணவர்கள் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை என இரு வழிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்படுவதும் திறக்கப்படுவதுமாக உள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் நேரடி பங்கேற்பின் மூலம் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.