ஷா ஆலம், நவ 25- சிலாங்கூரில் மொத்தம் 273 உணவகங்கள் மலேசிய சுகாதார அமைச்சின் சுத்தமான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியத்திற்கான அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றுள்ளன.இந்த எண்ணிக்கையில் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவு விடுதிகள், பள்ளி கேன்டீன்கள், மருத்துவமனை கேன்டீன்கள் மற்றும் நடமாடும்உணவுக் கூடங்களும் அடங்கும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி ங்காடிமான் கூறினார்.
"உணவில் உள்ள கலோரி அளவை குறிப்பிடுவதன் மூலம் உணவின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் தரத்தை பாதுகாக்கும் கடப்பாட்டை வெளிப்படுத்தியதோடு 86 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற உணவகங்களுக்கு வாழ்த்துகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சியைத் தொடரும் அதேவேளையில் சுகாதாரத்தைப் பேணுவதில் மாநிலத்தில் உள்ள மற்ற உணவகங்களுக்கு முன்மாதிரியாக திகழும்படி சம்பந்தப்பட்ட உணவகங்களை அவர் கேட்டுக் கொண்டார்.
உணவு மாசுபடும் அபாயத்தைக் குறைப்பதிலும் ஆரோக்கியமான உணவைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விரிவான தகவல்களை வழங்குவதிலும் இந்த சான்றிதழ் திட்டம் முக்கியப் பங்கினை ஆற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மலேசிய நிறுவன ஆணையம் மற்றும் அதன் துறைகளில் பதிவு செய்திருக்க வேண்டும். இது தவிர, சுகாதார அமைச்சின் உணவுப் பிரிவு மற்றும் ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றார் அவர்.
ECONOMY
சிலாங்கூரில் உள்ள 273 உணவகங்களுக்கு சுகாதார தரச் சான்றிதழ்
25 நவம்பர் 2021, 8:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் நீண்டகால இடையூறுகள் உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

national
புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் - பிரதமர்
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

selangor
பொருளாதார நெருக்கடி: சிலாங்கூரில் 40 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




