ஷா ஆலம், நவ 23- சிலாங்கூர் மாநில அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் மூன்று நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அந்நிகழ்வை தவறாது காணும்படி மாநில மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.இம்மாதம் 26 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் நடைபெறும் இந்த வரவு செலவுத் தாக்கல் நிகழ்வு அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் மீடியா சிலாங்கூர் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அவர் சொன்னார்.
வரவு செலவுத் திட்டம் வாயிலாக பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கும் அதனை மீட்சியுறச் செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள இந்நிகழ்வை தவறாது காணுங்கள் என்று அவர் தனது டிவிட்டர் பணிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விரு சமூக ஊடகங்கள் தவிர்த்து selangortv.my வாயிலாகவும் அந்த வரவு செலவுத் திட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
மேலும், மேண்டரின் (selangorkini.my/zh-hans/) தமிழ்
ஆங்கிலம் ( http://selangorjournal.my) ஆகிய அகப்பக்கங்கள் வாயிலாகவும் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
ECONOMY
2022 வரவு செலவு திட்ட தாக்கல் நிகழ்வை தவறாது காண்பீர்! பொதுமக்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்
23 நவம்பர் 2021, 3:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

உங்கள் கருத்து என்ன?




