ஷா ஆலம், நவ 21- யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் 2021 ஆண்டு நவம்பர் மாத கல்வித் தவணைக்கு 522 புதிய மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.பவுண்டேஷன் எனப்படும் அடிப்படை கல்வி, டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பு ஆகிய துறைகளில் சேர்வதற்கு அம்மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் சந்தை மற்றும் மாணவர் சேர்ப்பு துறையின் இயக்குநர் இணைப் பேராசிரியர் டாக்டர் ஹஷிமா இஸ்மாயில் கூறினார்.
நவம்பர் மாத கல்வித் தவணைக்கான விண்ணப்ப தேதி வரும் டிசம்பர் 17ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர் எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே, இம்மாதம் 17 ஆம் தொடங்கிய மாணவர் அறிமுக வாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக யுனிசெல் வர்த்தக தொடர்புப் பிரிவுத் தலைவர் ஹஸ்ரி அபு ஹசான் குறிப்பிட்டார்.
யுனிசெல் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர விரும்புவோர் மேல் விபரங்களுக்கு apply.unisel.edu.my. Layari www.unisel.edu.my என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 03-55223400 /014-8172198 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
யுனிசெல் பல்கலைக்கழகத்தில் சேர 522 மாணவர்கள் பதிவு
22 நவம்பர் 2021, 6:10 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சிலாங்கூர் எம்பிஐ தயார்நிலை: வியூகம் வகுக்க ஆலோசனை
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

sukankini
மலேசிய இந்திய மாணவர்கள் சதுரங்க போட்டியில் உலகளவில் சாதனை புரிய இதுபோன்ற போட்டிகள் அவசியம் .
n.pakiya, Shalini Rajamogun
26 ஜூலை 2025

pendidikan
மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் 1326 மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி
n.pakiya, Shalini Rajamogun
26 ஜூலை 2025

selangor
பொருளாதார நெருக்கடி: சிலாங்கூரில் 40 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




