ECONOMY

நுட்ப கோளாறு காரணமாக 27 பகுதிகளில் நீர் விநியோகம் பாதிப்பு

20 நவம்பர் 2021, 6:58 AM
நுட்ப கோளாறு காரணமாக 27 பகுதிகளில் நீர் விநியோகம் பாதிப்பு

ஷா ஆலம், நவ 20- பூச்சோங் கம்போங் கெனாங்கான் சைம் யுஇபி நீர் சேகரிப்பை குளத்தில் நீர் மட்டம் குறைந்ததால் நீர் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு இன்று நள்ளிரவுக்குள் சரி செய்யப்படும்.

இந்த நுட்ப பிரச்சனை காரணமாக பெட்டாலிங் மாவட்டத்தின் யுஎஸ்ஜே 1 முதல் யுஎஸ்ஜே 27 வரையிலான பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

அந்த நீர்  சேகரிப்பு குளத்தில் உள்ள பிரதான நீர் பகிர்வு குழாயில் ஏற்பட்ட நுட்ப  பிரச்சனையினால் நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இப்பிரச்சனையை களைவதற்கான நடவடிக்கையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அந்த நீர் சேகரிப்பு குளத்தில் போதுமான அளவு நீர் நிரம்பியவுடன் வாடிக்கையாளர்களுக்கு நீரை விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் என்றும் அவ்வறிக்கை தெரிவித்தது.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தின் தொலைவு மற்றும் நீர் அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து நீர் விநியோக நேரம் மாறுபடும் என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.