MEDIA STATEMENT

மலாக்கா தேர்தல்- ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க 12 தொகுதிகளுக்கு மந்திரி புசார் வருகை

15 நவம்பர் 2021, 10:58 AM
மலாக்கா தேர்தல்- ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க 12 தொகுதிகளுக்கு மந்திரி புசார் வருகை

மலாக்கா, நவ 15- மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநிலத்தில் களமிறங்கியுள்ளார்.

இந்த பயணத்தின் போது அவர் மாநிலத்திலுள்ள 12 தொகுதிகளுக்கு வருகை புரிந்து ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

சுங்கை ரம்பாய், ரிம், அசகான், மாச்சாப் ஜெயா, ஆயர் மோலேக், தஞ்சோங் பிடாரா, சுங்கை ஊடாங், லெண்டு, பாயா ரும்புட் மற்றும் கோத்தா லக்ஸ்மனா ஆகியவையே மந்திரி புசார் வருகை புரிந்த தொகுதிகளாகும்.

புக்கிட் செங்கே பெல்டா நிலக்குடியேற்றப் பகுதிக்கும் வருகை புரிந்த அவர் அங்கு சுமார் 30 நிமிடங்களைச் செலவிட்டு நிலக்குடியேற்றவாசிகளுடன் அளவளாவினார்.

மலாக்கா பாராட் மீனவர் சங்க பிரதிநிதிகளை தஞ்சோங் பிடாரா தொகுதி வேட்பாளர் ஜைனால் ஹசானுடன் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

சிலாங்கூர் மாநில அரசின் உயர்மட்டத் தலைவர் பிரசாரத்திற்காக வருகை புரிந்த து குறித்து சுங்கை ரம்பாய் தொகுதி வேட்பாளர் பர்சியானா ஹயானி முகமது நாசீர் பெருமிதம் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.