ECONOMY

2021/2022 மூன்றாம் பள்ளித் தவணை ஜனவரி 3 முதல் மார்ச் 20 வரை நடைபெறும்

15 நவம்பர் 2021, 10:22 AM
2021/2022 மூன்றாம் பள்ளித் தவணை ஜனவரி 3 முதல் மார்ச் 20 வரை நடைபெறும்

ஷா ஆலம், நவ 15- 2021/2022 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்வித் தவணை அடுத்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல் மார்ச்  20 ஆம் தேதி வரை நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

“ஏ“ பிரிவிலுள்ள ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் மேற்கண்ட தேதியில் கல்வித் தவணை நடைபெறும் என்று அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பினாங்கு, சபா, சரவா, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா, லபுவான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய “பி“ பிரிவில் ஜனவரி 3 ஆம் தேதி  முதல் மார்ச் 20 வரை மூன்றாம் கல்வித் தவணை நடைபெறும் என்று அது தெரிவித்தது.

அதே சமயம் “ஏ“ பிரிவு பள்ளிகளில் 2022/2023 ஆம் ஆண்டிற்கான பள்ளித் தவணை 2022 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி முதல் 2023 மார்ச் 11 வரை  நடைபெறும்.

“பி“ பிரிவிலுள்ள பள்ளிகளில் அடுத்தாண்டு மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி 2023 மார்ச் 12 வரை பள்ளித் தவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.