ECONOMY

78.5 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்.

12 நவம்பர் 2021, 7:37 AM
78.5 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்.

கோலாலம்பூர், நவ 12- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 78.5 விழுக்காட்டினர் அல்லது 24 லட்சத்து 72 ஆயிரத்து 98 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். 

நேற்று நள்ளிரவு 11.59 மணி வரை பதிவான எண்ணிக்கை இதுவாகும் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

அதே சமயம், 2 கோடியே 22 லட்சத்து 58 ஆயிரத்து 551 பெரியவர்கள் அல்லது 95.1 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

மேலும், 4.4 விழுக்காட்டினர் அல்லது 10 லட்சத்து 31 ஆயிரத்து 946 பேர் தடுப்பூசியை இன்னும் பெறாத நிலையில் 2 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரத்து 780 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக 75.7 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 47 லட்சத்து 30 ஆயிரத்து 649 பேருக்கு தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 143,662 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 42,888 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 8,49 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 92,325 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 9 லட்சத்து 46 ஆயிரத்து 620 ஆக உயர்வு கண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.