MEDIA STATEMENT

சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் துணைத் தலைவராக டாக்டர் மஸ்லி நியமனம்

29 அக்டோபர் 2021, 12:56 PM
சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் துணைத் தலைவராக டாக்டர் மஸ்லி நியமனம்

ஷா ஆலம், அக் 29- சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் துணைத் தலைவராக முன்னாள் கல்வியமைச்சர் டாக்டர்  மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தம்மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய சிலாங்கூர் அரசுக்கு டாக்டர் மஸ்லி நன்றி தெரிவித்துக் கொண்டார். தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை இயன்ற வரை சிறப்பான முறையில் ஆற்றுவேன் என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தினால் வழிநடத்தப்படும ராஜா துன் ஊடா நூலகம் மிகவும் வெற்றிகரமான மற்றும் ஆக்கத் தன்மைமிக்க நூலகமாகவும் நவீன அம்சங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா சிந்தனையில் உருவான இந்த திட்டம் மாற்றுத் திறனாளிகள், குடும்பத்தினருடன் வருவோர் மற்றும் இளம் தலைமுறையினருக்கு நட்புறவானதாகவும் உள்ளது என்றும் அவர் சொன்னார்.

இந்த நியமனத்திற்காக சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் தலைவரும் மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.