ECONOMY

எஸ்.ஒ.பி. விதி மீறல்- தேசிய முன்னணிக்கு 10,000 வெள்ளி அபராதம்

28 அக்டோபர் 2021, 7:02 AM
எஸ்.ஒ.பி. விதி மீறல்- தேசிய முன்னணிக்கு 10,000 வெள்ளி அபராதம்

ஷா ஆலம், அக் 28- தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) கூட்டணிக்கு நேற்று கெப்போங் சுகாதார அலுவலகம் 10,000 வெள்ளி அபராதம் விதித்தது.

தேர்தல் தொடர்பான எந்த பேரணியும் நடத்தக்கூடாது என்ற தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம்  கட்டத்திற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) பின்பற்றத் தவறியதற்காக அந்த அரசியல் கட்சி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் நவம்பர் 27 ஆம் தேதி வரை அனைத்து விதமான அரசியல் பேரணிகள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இம்மாதம் 24 ஆம் தேதி கூறியிருந்தார்.

தேர்தல் இயந்திரங்களின் தொடக்க நிகழ்வுக்கும் இத்தடை பொருந்தும் எனக் கூறிய அவர், கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.