ECONOMY

தீபாவளியை முன்னிட்டு கோல குபு பாருவில் 450 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்

27 அக்டோபர் 2021, 10:52 AM
தீபாவளியை முன்னிட்டு கோல குபு பாருவில் 450 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்

ஷா ஆலம், அக் 27- தீபாவளியை முன்னிட்டு கோல குபு பாரு தொகுதியைச் சேர்ந்த 450 குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோ கூறினார்.

இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பத்தாங் காலி, எக்கோன்சேவ் பேராங்கடியில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பி40 தரப்பினரை இலக்காக கொண்டு இந்த ஜோம் ஷோப்பிங் திட்டத்தை சிலாங்கூர் அரசு அமல்படுத்தியுள்ளது. மக்களின் நல்வாழ்வு மற்றும் சுபிட்சத்தை உறுதி செய்யக்கூடிய நீண்டகாலத் திட்டதின் ஒரு பகுதியாக இந்த உதவி அமைந்துள்ளது.

முக்கிய பெருநாள் காலங்களில் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ள இந்த ஜோம் ஷோப்பிங் திட்டம் வகை செய்கிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.