ECONOMY

ரூமா இடாமான் திட்டம் தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு- மந்திரி புசார் வெளியிடுவார்

26 அக்டோபர் 2021, 3:49 AM
ரூமா இடாமான் திட்டம் தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு- மந்திரி புசார் வெளியிடுவார்

ஷா ஆலம், அக் 26- மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) ரூமா இடாமான் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை புதன் கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்.

அவரது அறிவிப்பு நாளை மாலை 2.30 மணியளவில் அமிருடின் ஷாரி …  மற்றும் பிளாட்ஸ் எனப்படும் பிளாட்பார்ம் சிலாங்கூர் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

“பொருள் பொதிந்த வாழ்க்கையை உருவாக்கும் வாய்ப்பு உங்கள் கரங்களில் உள்ளது. நாளை என்னை சந்திக்கத் தவறாதீர்கள்“ என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்  ஷாரி காணொளி வாயிலாக கூறினார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் 41 ரூமா சிலாங்கூர் கூ மற்றும் ரூமா இடாமான் ஹராப்பான் திட்டங்கள் வாயிலாக 80,650 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று கடந்த மே மாதம் 2 ஆம் தேதி அமிருடின் கூறியிருந்தார்.

அவற்றில் 77,000 வீடுகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் வேளையில் எஞ்சிய வீடுகள் விவேக வாடகை கொள்முதல் திட்டத்தை அமல்படுத்துவதற்காக  மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.