ECONOMY

பத்தாங் காலி சி.ஏ.சி. மையம் புதிய இடத்திற்கு மாற்றம்

12 அக்டோபர் 2021, 7:21 AM
பத்தாங் காலி சி.ஏ.சி. மையம் புதிய இடத்திற்கு மாற்றம்

ஷா ஆலம், அக் 12- பத்தாங் காலி சமூக மண்டபத்தில் செயல்பட்டு வந்த கோவிட்-19 மதிப்பீட்டு மையம் (சி.ஏ.சி.) இன்று தொடங்கி கோல குபு பாரு கேம் பீனா செமங்காட் மையத்திற்கு மாற்றப்படுகிறது.

பத்தாங் காலி  தொகுதி சேவை மையம், மாவட்ட இலாகா, சுகாதார அலுவலகம் மற்றும் துணை மாவட்ட பெங்குளு ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த இட மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த மையத்திற்கு அருகில் இருந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மத்தியில் காணப்பட்ட அச்சத்தை இந்த இந்த மாற்ற நடவடிக்கை போக்கியுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

இந்த மையம் புதிய இடத்தில் காலை 8.00 மணி முதல் செயல்படும். இந்த மையத்தை இடமாற்றம் செய்வதற்கு உதவிய மந்திரி புசார் கழகத்திற்கு  (எம்.பி.ஐ.) நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.

இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பத்தாங் காலி சி.ஏ.சி. மையம் மூடப்படுவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரப்பட்ட விளக்கம் படம் ஒன்று கூறியது.

நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் 999 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.