ECONOMY

12வது மலேசியத் திட்டத்தின் கீழ் சிலாங்கூரில் 98 வெள்ளத் தடுப்பு திட்டங்கள்

9 அக்டோபர் 2021, 6:11 AM
12வது மலேசியத் திட்டத்தின் கீழ் சிலாங்கூரில் 98 வெள்ளத் தடுப்பு திட்டங்கள்

ஷா ஆலம், அக் 8- பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ்  சிலாங்கூரில் 98 வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 53 கோடியே 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முழுமையாக பூர்த்தியான சுங்கை பூலோ முதல் கட்ட நீர் தடுப்புத் திட்டமும் அதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

சுமார் 42 கோடியே 52 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 78 திட்டங்கள் 11 மலேசியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. 12 வது மலேசியத் திட்டத்தின் கீழ் மேலும் 98 திட்டங்களை  கொள்வதற்கு 53 கோடியே 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

12 வது மலேசியத் திட்டத்தின் கீழ் 44 கோடி வெள்ளி வழங்கப்பட்டு விட்ட நிலையில் 98 திட்டங்களில் ஒன்று அதாவது சுங்கை பூலோ முதல் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டம்  முழுமையாகப் பூர்த்தியடைந்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

பருவநிலை மாற்றும் மற்று வெள்ளப் பிரச்னைகளைக் களைவதற்கு ஏதுவாக ஐந்து திட்டங்களை மேற்கொள்ள மேலும் 130 கோடி வெள்ளி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.