MEDIA STATEMENT

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை 9,066 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 1,000 பேர் பாதிப்பு

3 அக்டோபர் 2021, 10:57 AM
நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை 9,066 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 1,000 பேர் பாதிப்பு

ஷா ஆலம், அக் 3- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று பத்தாயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று 10,915 ஆக இருந்த அந்த எண்ணிக்கை இன்று 9,066 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

சிலாங்கூரில் நேற்று 1,386 ஆக பதிவான நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 386 குறைந்து 1,000 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று எந்த மாநிலத்திலும் இரண்டாயித்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகவில்லை. சரவா மாநிலத்தில் அதிகமாக 1,418 நேர்வுகள் பதிவான வேளையில் மற்ற மாநிங்கள் ஆயிரத்திற்கும் குறைவான சம்பவங்களைப் பதிவு செய்தன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை வருமாறு-

ஜொகூர் (981), திரங்கானு (827), கிளந்தான் (796), சபா (767), கெடா (670), பேராக் (669), பகாங் (630), பினாங்கு (620), மலாக்கா (206), கோலாலம்பூர் (201), நெகிரி செம்பிலான் (191), பெர்லிஸ் (66), புத்ரா ஜெயா (24).

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.