ALAM SEKITAR & CUACA

பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை உணர்ந்து நடக்க வேண்டும்

20 செப்டெம்பர் 2021, 5:51 AM
பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் வானிலை மற்றும் சுற்றுச்சூழல்  மாற்றங்களை உணர்ந்து நடக்க வேண்டும்

கோலாலம்பூர், செப்டம்பர் 20: இந்த மாத இறுதியில் தொடங்கும் பருவமழையின் நிலைமாற்றக் கட்டத்தின் காரணமாக, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் பிக்னிக் செய்ய விரும்பும் மக்கள் வானிலை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணர்திறன் உடையவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவின் இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது, கடற்கரை அல்லது நீர்வீழ்ச்சியில் குதிப்பது மலை ஏறுதல் மற்றும் சுற்றுலா போன்ற செயல்களைச் செய்யும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

கடற்கரைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் விபத்துகளுக்கு கவனக்குறைவான அணுகுமுறையும், வலுவான நீரோட்டங்கள் மற்றும் பலத்த காற்றின் சூழ்நிலையை ஒரு பொருட்டாக கருதாதோ காரணம் என்றார். "நீர்வீழ்ச்சி பகுதியில் பிக்னிக் செய்தால், தண்ணீர் தொடர்பான விபத்துகளில் சிக்காமல் இருக்க, குறிப்பாக முந்தைய நாள் மழை பெய்தல், நீர் அளவு மாற்றங்கள் குறித்து மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அவர்கள் நிறைய, மரக் கிளைகள் மற்றும் இலைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப் படுவதைக் கண்டால்,  குளிப்பதை நிறுத்தி பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும், ஏனெனில் அது நீர் பெருக்கத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.

அதே போல், "மழை அல்லது பலத்த காற்று இருந்தால், கடற்கரையிலோ அல்லது நீர்வீழ்ச்சியிலோ சுற்றுலா செல்வோர் தண்ணீரில் செயல்பாடுகளைத் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனென்றால் தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதால் உடல் பிடிப்புகள் எளிதில் ஏற்படும், இது நீரில் மூழ்குவதற்கு ஒரு காரணியாகும்" என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

இந்த நேரத்தில் அடிக்கடி மழை பெய்து வருவதால் மலை ஏறும் நடவடிக்கைகளின் விரும்பிகளும் கவனமாக இருக்க வேண்டும் இது ஏறும் பாதை வழுக்கும் மற்றும் ஆபத்தானது என்றும் ஹிஷாம் கூறினார்.

இதற்கிடையில், பருவமழை மாற்றம் மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தயார் நிலை குறித்து கருத்து தெரிவித்த நோர் ஹிஷாம்,  பணியாளர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுவர் என்றார்.

இதன் பொருள் ஒன்பது பேர் கொண்ட ஒவ்வொரு ஷிப்டிலும், ஒரு உறுப்பினர் மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதிக்கப் படுகிறார். அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் ஆறு மாநிலங்களில் JBPM கவனம் செலுத்தும். "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) உறுப்பினர்களும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவைப்பட்டால் உதவ தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப் படுவார்கள்," என்று அவர் கூறினார்.

பருவமழையின் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து நவம்பர் தொடக்க காலப்பகுதியின் மாற்றத்தின் போது மாலை மற்றும் இரவு நேரங்களில் நாட்டில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது. வடகிழக்கு பருவமழை நவம்பர் முதல் டிசம்பர் வரை கிளாந்தான், திராங்கானு மற்றும் பகாங்கிலும், ஜோகூர், சபா மற்றும் சரவாக் அடுத்த ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி வரை அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.