MEDIA STATEMENT

சிலாங்கூரில் கோவிட்-19 எண்ணிக்கை 3,595 ஆக உயர்ந்தது

10 செப்டெம்பர் 2021, 9:08 AM
சிலாங்கூரில் கோவிட்-19 எண்ணிக்கை 3,595 ஆக உயர்ந்தது

ஷா ஆலம், செப் 10- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்ந்து 3,595 ஆக ஆனது. கடந்த நான்கு நாட்களாக இம்மாநிலம் மூவாயிரத்திற்கும் குறைவான கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 2,700 சம்பவங்களும், நேற்று முன்தினம் 2,989 சம்பவங்களும் செவ்வாய்க்கிழமை 2,107 சம்பவங்களும் திங்களன்று 2,126 சம்பவங்களும் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது 3,734 சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்து ஜொகூர் (2,297), சபா (2,246), பினாங்கு (1,939), கெடா (1,808), பேராக் (1,366), கிளந்தான் (1,254) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- பகாங் (853), திரங்கானு (776), மலாக்கா (485), கோலாலம்பூர் (46), நெகிரி செம்பிலான் (252), பெர்லிஸ் (77), புத்ரா ஜெயா (21), லபுவான் (6).

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.