ECONOMY

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை 30 விழுக்காடாக நிலை நிறுத்தும் திட்டத்திற்கு சுல்தான் வரவேற்பு

23 ஆகஸ்ட் 2021, 10:30 AM
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை 30 விழுக்காடாக நிலை நிறுத்தும் திட்டத்திற்கு சுல்தான் வரவேற்பு

ஷா ஆலம், ஆக 23- மாநிலத்திலுள்ள நிலப்பகுதியில் 30 விழுக்காட்டை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக நிலை நிறுத்தும் மாநில அரசின் முடிவை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வரவேற்றுள்ளார்.

பசுமைத் திட்ட அமலாக்கத்திற்கேற்ப மிகப் பொருத்தமான நடவடிக்கையாக இது அமைவதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

மாநிலத்திலுள்ள நிலப்பகுதியில் 31.47 விழுக்காடு அல்லது 250,000 ஹெக்டர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் 32 விழுக்காட்டு பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக நிலை நிறுத்த மாநில அரசு இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு 14 மாநில சட்டமன்றத்தின் 4 ஆம் தவணைக்கான கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

பாதுகாக்கப்பட்ட நிரந்தர வனப்பகுதியை தகுதி மாற்றும் செய்வது தொடர்பில்  பொதுமக்களிடம் கருத்து கேட்கும்  நடைமுறையை அமல் செய்துள்ள நாட்டின் ஒரே மாநிலம் சிலாங்கூர் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் பசுமை வளங்களைப் பாதுகாப்பதில் எனது தலைமையிலான அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையையும் உயர்ந்த பட்ச ஈடுபாட்டையும் இது பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.