ஆலோஸ்டார், ஆக19: யென் குனோங் ஜெராய் பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூவர் உயிரிழந்தனர்.
கெடா மந்திரி புசார் முஹம்மது சனுசி முகமட் நோர், நள்ளிரவு 1 மணிவரை கிடைத்த தகவலின்படி அந்த திடீர் வெள்ளத்தின் போது மேலும் மூவர் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இது தித்தி ஹயுனில் உள்ள ஒரு பகுதியில் அவர்களை காணவில்லை என்று தெவிக்கப்பட்டுள்ளது.
"பலியானவர்கள் (இறந்தவர்கள்) ஆண்கள், குணுங் ஜெராய் வரை செல்லும் வழியில் ஒரு நிலச்சரிவில் ஒரு பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப் பட்டார், அவர் 53 வயதான ஷாருசி முகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவரின் உடல் கொண்டு வரப்பட்டது மேலும் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்," என்று அவர் இன்று அதிகாலை வாட்ஸ்அப் மூலம் தெரிவித்தார்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணி ஒரு கணம் முன்பு முடிந்துவிட்டதாகவும், இன்று காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
நேற்று மாலை 5 மணியளவில் நடந்த சம்பவத்தில் பெர்கி, தெரோய் புக்கிட், சிங்கர், கம்போங் பெர்மாடங் கெரமாட், கம்பொங் லுபுக் புவாய் , பெக்கான் யான் புசார், தித்தி தேராஸ், கம்போங் ஆச்சே மற்றும் கம்போங் செதோய் ஆகிய மலை அடிவாரத்தில் உள்ள பகுதி மற்றும் ஆற்றின் அருகிலுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளவையாகும்.







