ECONOMY

ஜனவரி முதல் 18 ஆற்றுத் தூய்மைக்கேட்டு சம்பவங்கள் முறியடிப்பு-லுவாஸ் தகவல்

23 ஜூன் 2021, 4:20 AM
ஜனவரி முதல் 18 ஆற்றுத் தூய்மைக்கேட்டு சம்பவங்கள் முறியடிப்பு-லுவாஸ் தகவல்

ஷா ஆலம், ஜூன் 23- இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று முனதினம் வரை சிலாங்கூரில் 18 ஆற்றுத் தூய்மைக்கேட்டு சம்பவங்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில நீர் நிர்வாக வாரியம் கூறியது.

இது தவிர நீர் தூய்மைக்கேடு சம்பவங்கள் தொடர்பில் எந்த புகாரும் அக்காலக்கட்டத்தில் பெறப்படவில்லை என்றும் அது தெரிவித்தது.

அடிக்கடி மாசுபாடு பிரச்னையை எதிர்நோக்கும் பகுதிகளில் குறிப்பாக, சுங்கை சிலாங்கூர், சுங்கை லங்காட், மற்றும் சுங்கை கிள்ளான் வடிநிலப் பகுதிகளில் லுவாஸ் வாரியத்தின் அதிரடி பணிக்குழு 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அந்த வாரியம் குறிப்பிட்டது.

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த போதிலும் கண்காணிப்பு பணிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். 

நீர் மாசுபாடு ஏற்படுவதை தடுப்பது மற்றும் நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடுப்படுவதை தவிர்ப்பது மட்டுமின்றி மாநிலத்தில் நீர் வளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது என அவ்வாரியம் தெரிவித்தது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.