ECONOMY

நெல், அரிசி சார்ந்த துறைகள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி

18 ஜூன் 2021, 4:23 AM
நெல், அரிசி சார்ந்த துறைகள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி

நெல், அரிசி சார்ந்த துறைகள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி

 

ஷா ஆலம், ஜூன் 18- நெல் மற்றும் அரிசி சார்ந்த துறைகள் முழு அளவிலான ஆள்பலத்துடன் 24 மணி நேரமும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை  இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயம்  மற்றும் உணவுத் தொழில் துறை அமைச்சு கூறியது.

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நெல் மற்றும் அரிசி உற்பத்தி எந்த வகையிலும் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யும் கடப்பாட்டைக் கொண்டுள்ளதாக  அது தெரிவித்தது.

நாட்டில் போதுமான அளவு அரிசி கையிருப்பு உள்ளதை இந்நடவடிக்கையின் மூலம் உறுதி செய்ய முடியும் என்று அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல் பயிடுவதல், அறுவடை, பராமரிப்பு, நீர் பாசனம் உள்ளிட்ட நெல் விவசாயம் சார்ந்த துறைகளில் எஸ்.ஒ.பி. எனப்படும் சீரான செயலாக்க நடைமுறையை தாங்கள் மேம்படுத்தியுள்ளதாகவும்  அமைச்சு தெரிவித்தது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.