ad
HEALTH

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு உதவித் தொகைக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

16 ஜூன் 2021, 2:23 AM
மாற்றுத் திறனாளிகள் சிறப்பு உதவித் தொகைக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூன் 16- கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு உதவித் தொகைக்கு தகுதி பெற்ற மாற்றுத் திறனாளிகள் வரும் ஜூலை மாதம் முதல் தேதி  தொடங்கி விண்ணப்பம் செய்யலாம்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1.200 மாற்றுத் திறனாளிகள் இந்த உதவித் திட்டத்தின் மூலம் பயன் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதற்கான விண்ணப்பத்தை  httips://www.anisselangor.com/bantuanoku எனும் அகப்பக்கம் வாயிலாக செய்யலாம். மேல் விபரங்களுக்கு 018-2567093/018-2356213 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களாகவும் சிலாங்கூர் மாநில சமூக நலத்துறையினால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை கொண்டிருப்பவர்களாகவும் இருப்பது அவசியம் என்று அமிருடின் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று  காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 500 வெள்ளி வழங்குவதற்கு ஏதுவாக கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தின் கீழ் 600,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் அண்மையில் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.