MEDIA STATEMENT

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 5,419 ஆக உயர்வு

15 ஜூன் 2021, 11:15 AM
கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 5,419 ஆக உயர்வு

ஷா ஆலம், ஜூன் 15- நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்வு கண்டு 5,419 ஆக ஆனது. சிலாங்கூரிலும் இந்த நோய்த் தொற்று 1,996 ஆக ஏற்றம் கண்டுள்ளது.

இன்றைய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 667,876 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மாநில வாரியாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு-

சிலாங்கூர் (1,996), கோலாலம்பூர் (650), சபா (230), ஜொகூர் (366), சரவா (718), நெகிரி செம்பிலான் (396), கிளந்தான் (245), பினாங்கு 124), பேராக் (68), கெடா (252), மலாக்கா (155), பகாங் (32), திரங்கானு (43), லபுவான் (138), புத்ரா ஜெயா (5), பெர்லிஸ் (1).

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.