MEDIA STATEMENT

ஊடகவியலாளர்களுக்கு புதன் கிழமை தொடங்கி தடுப்பூசி செலுத்தப்படும் 

7 ஜூன் 2021, 2:25 PM
ஊடகவியலாளர்களுக்கு புதன் கிழமை தொடங்கி தடுப்பூசி செலுத்தப்படும் 

கோலாலம்பூர், ஜூன் 7- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பதிந்து கொண்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு வரும் புதன்கிழமை தொடங்கி முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

தடுப்பூசி பெறுவதற்கான தேதியை பத்திரிகையாளர்கள் இன்று தொடங்கி பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

வரும் புதன் கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் வேளையில் சில பத்திரிகையாளர்கள் இன்று முதல் அதற்கான தேதியை பெறுவர் என்றார் அவர்.

 எனினும், தடுப்பூசியைப் பெறும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இன்னும்  உறுதி செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், அதனைத் திரட்டும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தடுப்பூசி பெறுவதற்கான தேதியை ஜூன் மாதம் பெறுவர் என்று கைரி கடந்த மாதம் கூறியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.