MEDIA STATEMENT

சரவா மாநிலத் தேர்தல் ஒத்தி வைப்பு- தேர்தல் ஆணையைம் அறிவிப்பு

7 ஜூன் 2021, 2:32 AM
சரவா மாநிலத் தேர்தல் ஒத்தி வைப்பு- தேர்தல் ஆணையைம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 7- இவ்வாண்டு நடத்தப்படவிருந்த சரவா மாநிலத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாட்சிமை தங்கிய பேரரசர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பிரகடனப்படுத்திய  2021ஆம் ஆண்டு அவசர காலச் சட்டத்தின் (அத்தியாவசிய அதிகாரங்கள்) 13வது பிரிவுக்கேற்ப இம்முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மாருள்டின் இஷாக் கூறினார்.

மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்தப் பின்னர் பொருத்தமானது என மாமன்னர் கருதும் ஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

சரவா மாநிலத்தின் 18வது தவணைக் காலம் முடிவடைவது தொடர்பான அறிவிப்பை சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் 2021ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் (அத்தியாவசிய அதிகாரங்கள்) 15வது பிரிவின் கீழ் சரவா மாநில சட்டமன்றத்தை கூட்டுவது அல்லது கலைப்பது செல்லத்தக்கதாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.