ஷா ஆலம் ஜூன் 5 - நாளையுடன் முடிவுக்கு வரவிருந்த கெஅடிலான் கட்சியின் 15வது பேராளர் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மன்றம் கடிதம் வாயிலாகவும் சங்கங்களின் பதிவதிகாரி நேரிலும் வழங்கிய உத்தரவின் பேரில் இந்த மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளரும் இயக்குநருமான நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.
மாநாடு முழு அளவில் இயங்கலை வாயிலாக நடத்தப்படும் பட்சத்தில் அதனை நடத்த தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று தேசிய பாதுகாப்பு மன்றம் கடந்த மாதம் 27ஆம் தேதி வழங்கிய கடிதத்திற்கு முரணாக இந்த உத்தரவு அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் பிறிதொரு தேதிக்கு மாநாட்டை ஒத்தி வைக்க கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநாட்டை ஒத்தி வைக்கும் முடிவு குறித்து நாளை காலை 11.00 மணிக்கு வாயிலாக உறுப்பினர்களுக்கு ஆற்றும் முக்கிய உரையில் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்துவார் என்றும் நிக் நஸ்மி தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டிற்கான இந்த மூன்று நாள் மாநாடு மகளிர் பிரிவு கூட்டத்துடன் நேற்று தொடங்கியது. இன்று இளைஞர் பிரிவு கூட்டம் நடைபெற்ற வேளையில் நாளை கட்சியின் பேராளர் மாநாடு நடைபெற திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்த மாநாடு முழுமையாக இயங்கலை வாயிலாக நடத்தப்படுகிறது.








