ஷா ஆலம், மே 29- வரும் ஜூன் மாதம் முதல் தேதி முதல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப் படவிருக்கும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பொது மக்கள் எதிர் கொள்வதற்கு ஏதுவாக உதவித் திட்டங்களையும் வங்கிக் கடனை திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டத்தையும் அறிவிக்கும்படி அரசாங்கத்தை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.
கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தாங்கள் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை வரவேற்பதாக எழு நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பக்கத்தான் வாழ்க்கைச் செலவின நடவடிக்கை குழு கூறியது.
- குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர் மற்றும் நடுத்தர வருமானம் பெறும் எம்40 பிரிவினருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கக்கூடிய நிதி உதவித் திட்டத்தை அறிவிக்க வேண்டும்
- வங்கிக் கடன்களை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கும் நடைமுறையை அமல் செய்ய வேண்டும்
3 தெனாகா நேஷனல் நிறுவனத்தின் மின் கட்டணத்திற்கு கழிவு வழங்கப்பட வேண்டும்.‘
4- அத்தியாவசியப் பொருள்கள் போதுமான அளவு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
- அத்தியாவசியப் பொருள்களின் வலை ஏற்றம் காணாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- அத்தியாவசியப் பொருள்களின் விநியோக முறையில் இடையூறு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- உணவுக் கூடை உதவித் திட்டம் சரியான தரப்பினரை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.








