ECONOMY

பேரரசர் தம்பதியரின் விசாக தின வாழ்த்துக்கள்

26 மே 2021, 6:31 AM
பேரரசர் தம்பதியரின் விசாக தின வாழ்த்துக்கள்

கோலாலம்பூர், மே 26- நாட்டிலுள்ள அனைத்து பௌத்த சமயத்தினருக்கும்  மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும்  ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா தம்பதியர் இனிய விசாக தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இந்த இனிய திருநாள் பெளத்த சமயத்தினருக்கு பொருள் பொதிந்த  நாளாக அமைய தாங்கள் வாழ்த்துவதாக மாமன்னர் தம்பதியர் அரண்மனையின் அதிகாரத்துவ முகநூல் வாயிலாக தெரிவித்தனர்.

சமூகத்தின் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து புதிய இயல்பில் இந்த பெருநாளை கொண்டாடும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

நடப்பு சவால்களை பொறுமையுடன் எதிர்கொள்வோம். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உரிய பங்களிப்பை வழங்குவோம் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் மாமன்னர் தம்பதியர் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.